தந்தை சிவராஜ் அவர்கள் வரலாற்றில் இருந்து சுவையான சில சம்பவங்கள்.
உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பவர்களாகவும் விடுதலையை தேடுபவர்களாகவும் பரந்த நன்நோக்கம் உடையவர்களாகவும் உள்ளவர்களால் தான் உலக வரலாறுகள் மாற்றி முன்னேற்றி எழுதப்படுகின்றன.
வர்க்கங்களின் போராட்டமே உலக வரலாறு என்று காரல் மார்க்ஸ் கூறியதும் மதங்களின் போராட்டமே ஜாதிகளின் போராட்டமே இந்திய வரலாறாக உள்ளது என்று டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் கூறியிருப்பதும்
மானுட இனங்கள் எவ்வாறு முரண்பாடுகளுக்கு இடையில் போராட்டங்களுக்கு இடையில் புதிய வரலாறுகளைப் படைக்கின்றன என்பதை இவ்வாசகங்கள் காட்டுகின்றன.
இவ்வகையில் இந்தியாவின் ஏறத்தாழ 2000, 3000 ஆண்டுகள் பல்வேறு நூல்களாக மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.
ஆனால், இந்த நாட்டின் பூர்வ குடிகளாக உள்ள பெரும்பான்மை விலக்கும் மக்களின் வரலாறுகள் முழுமையாக இந்த ஏடுகளில் பல்வேறு நூல்களில் பல ஆவணங்களை திட்டமிட்டு குறைத்து வரையப்பட்டுள்ளன அல்லது திரித்து எழுதப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி பாபாசாகேப் அம்பேத்கர் கூறும் இரண்டு கருத்துக்களை இங்கு குறிப்பிடலாம்.
ஒன்று இந்தியாவின் பூர்வ குடிகளான தீண்டப்படாதவர்களைக் குறைத்துக் காட்டுகின்ற கணக்குகள்.
இந்தியக் கையேடு என்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட கையேடுகளில் கூட தீண்டப்படாத மக்களைப் பற்றி மிக மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளன என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்.
மேலும், ஒரு சுவையான குறிப்பு பண்டித நேருவைப் பற்றி எழுதும் பொழுது மலைமலையாய் அவரது எழுதுகோலில் இருந்து எழுதிச் செல்லும் ஏடுகளில் எங்காவது இந்த நாட்டில் தீண்டப்படாதவர்களாக உள்ள 6 கோடி மக்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டு இருக்கிறாரா? என்றும் கேட்கின்றார்.
இவ்வகையில் இந்த நாட்டில் தலைவர்களாக, சிந்தனையாளர்களாக, வரலாற்று அறிஞர்களாக கருதப்படுபவர்கள் கூட பல உண்மையான வரலாறுகளை எடுத்துரைக்கும் நிலையில் இல்லை.
அவரவர்கள் அவரவர்கள் நிலையை பார்த்துக் கொண்டே செல்கிறார்கள். இதனால் மகத்தான வரலாறுகளைப் படைத்த மனிதர்களைப் பற்றிய பதிவுகள் மிக மிக குறைவாக உள்ளன என்றால் மிகை இல்லை.
மேலும் ஒரு சம்பவத்தை நானக்சந்த் ரட்டு அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கையில் இருந்து குறிப்பிடுகிறார்.
“பாபாசாகேப் உங்களைப் பற்றி ஒரு வரலாற்று நூலை தனஞ்செயன் கீர் என்பவர் எழுதி உள்ளார்” என்ற போது அந்த நூலை பார்த்துவிட்டு “பரவாயில்லை“ முயன்றுள்ளார்.
அது ஒரு நீண்ட போராட்டம் நீண்ட கதை அதை யாரும் அவ்வளவு எளிதாக எழுதி விட முடியாது.
அவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்துள்ளது. யாரும் அவ்வளவு எளிதாக நமது மாபெரும் போராட்டங்களை எழுதிவிட முடியாது. அவர் முயன்றுள்ளார்” என்று குறிப்பிட்டதாக ஒரு குறிப்பு தருகிறார்.
இவ்வாறு பல்வேறு மகத்தான வரலாறுகள் எழுதப்படாமல் பதியப்படாமல் உள்ளன.
குறிப்பாக சென்னையை மையப்படுத்தி 19, 20-ம் நூற்றாண்டுகளில் தனி மனிதர்கள் அளவிலும் சமுதாய இயக்கங்கள் அளவிலும் மற்றும் கிளர்ச்சிகள், கலவரங்கள், மாபெரும் பஞ்சங்கள், மாபெரும் அரசியல் மாற்றங்கள், மொழிப் போராட்டங்கள் என்று நடைபெற்றுள்ளன.
பல்வேறு நிகழ்வுகளிலும் விளிம்பு நிலைச் சமூகங்கள், உழைக்கும் வர்க்கங்கள் பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளன.
ஆனால் இவை பற்றிய விரிவான வரலாறுகள் இன்னும் எழுதப்படவில்லை. சிலசில குறிப்புகளும் சில சில கட்டுரைகளும் இத்தன்மையில் எழுதப்பட்டுள்ளன.
எழுதப்படாமல் உள்ள பெரிய நிகழ்வுகளில் சான்றுக்கு சில.
சென்னை கர்ணல் ஆல்காட், பண்டித அயோத்திதாசர் மூலமாக நிறுவப்பட்ட பள்ளிகள், சென்னையை மையப்படுத்தி மற்றும் கோலார் தங்க வயல் பர்மா தென் ஆப்பிரிக்காவை களமாகக் கொண்டு பண்டிகை அயோத்திதாசர் உருவாக்கிய பௌத்த மறுமலர்ச்சி இயக்கம், புலியன் தோப்பு கலவரம்,
பக்கிங்காம் கர்னாடிக் மில் கலவரம் 19-ம் நூற்றாண்டில் எழுந்த மாபெரும் பஞ்சம் (வெள்ளை யானை என்ற புதினம் இந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் எழுதப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் நடைபெற்ற அடித்தள மக்களின் எழுச்சியை மையப்படுத்தி எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் வல்லிசை என்று எழுதி உள்ளார்.
இவையெல்லாம் ஆயிரத்தில் ஒரு பகுதியாக உள்ளன. ஆனால், விரிவாக எழுதப்பட வேண்டியவை)
1938-ல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம், 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் (அண்மையில் பராசக்தி திரைப்படம் இந்த அடிப்படையில் வந்துள்ளது.)
இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி தமிழ் அறிஞர்கள் பலர் நூல்கள் எழுதியுள்ளனர்.
மா.இளஞ்செழியன் எழுத்து சிவானந்த அடிகள் ஆர்.ராமசாமி என்று இவ்வகையில் பலர் எழுதியுள்ளனர்.
இந்தி எதிர்ப்பு காவியம் என்று கண்ணதாசனும் எழுதியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதல் களப்பலியான நடராசன் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கவிதையும் எழுதி உள்ளார்.
ஆனால், இத்தகு போராட்டங்களில் மகத்தான பங்களிப்பை நம்பிய அன்னை மீனாம்பாள் உள்ளிட்ட பலரின் வரலாறுகள் இன்னும் விரிவாக எழுதப்படவில்லை.
இதே வகையில் தமிழகத்தில் 1980-களிலிருந்து 2010 வரை ஈழ போராட்டத்திற்கு ஆதரவாக எழுந்த அலைகள் அதற்காக உருவான கலை படைப்புகள் என்றெல்லாம் மிக விரிவாக எழுத வேண்டிய களங்கள் நிறைய உள்ளன.
21-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் அடித்தள மக்களின் பண்பாட்டு விடுதலை போக்குகளும் மிக விரிவாக எழுதத்தக்கவை.
ஆனால், அறிஞர்கள் கவிஞர்கள் வரலாற்றுச் சிந்தனையாளர்கள் இத்துறையில் கவனம் செலுத்திட வேண்டும்.
வேறு சிலர் இதைப்பற்றிய உண்மைகளை மறைத்து வெவ்வேறு விதமாக காட்டுகின்ற பார்வையிலேயே பல ஏடுகளை படைத்து வருகின்றார்கள்.
இது உள்ளிருந்தும் படைக்கப்படுகின்றன வெளியே இருந்தும் படைக்கப்படுகின்றன. இவை எதிர்ப் புரட்சிகளின் பதிவுகளாக விளங்குகின்றன.
தனிமனித ஆளுமைகளாக தந்தை சிவராஜ் எம்.சி.ராஜா, சிவ சண்முகம் பிள்ளை, எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகநாதன், தென் தமிழகத்தில் பீட்டர் பெருமாள், தேக்கம்பட்டி பாலசுந்தரராசு என்று தமிழக முழுவதும் விளிம்பு நிலை சமூகங்களில் இருந்து உருவான மகத்தான ஆளுமைகள் அறிவாளர்கள் சிந்தனையாளர்கள் மரபு பெரியதாக இருந்துள்ளன.
இந்த ஆளுமைகள் பற்றி மிக விரிவாக கல்வி புலன்களிலோ அல்லது கல்வியை தாண்டிய வெளிப்புறங்களிலோ இன்னும் நிகழ்த்த பெறாமல் உள்ளன என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
அறிஞர் அன்பு பொன்னோவியம் உள்ளிட்ட முன்னோடிகள் எழுதிய குறிப்புகளிலேயே கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாட்டு அடித்தள மக்கள் விடுதலை வரலாறுகள் சுழன்று கொண்டு இருக்கின்றன.
ஒரு சில ஆய்வாளர்கள் தேடித்தேடி புதிய புதிய தரவுகளை தருகின்றனர். இந்தக் களம் இன்னும் விரிவு செய்யப்பட வேண்டும்.
திராவிட இயக்கச் சார்பில் மற்றும் பொதுவுடமை இயக்க சார்பில் உள்ள அறிஞர்கள் டாக்டர் அம்பேத்கரை பற்றி மட்டும் எழுதினால் பேசினால் போதும் என்று எண்ணுகின்றனர்.
ஆனால், அவரின் காலத்திற்கு முன்னர் இருந்தும் அவரது சமகாலத்திலும் இன்னும் அவருக்கு பின்னும் அகில இந்திய அளவில் அடித்தள மக்கள் விடுதலையிலும் இந்திய ஜனநாயக வளர்ச்சியிலும் மகத்தான பெரும் பங்களிப்புகளை நல்கிய ஆளுமைகள் தென்னிந்தியாவில் தமிழகத்தில் இருந்துள்ளனர்.
அண்மையில் தலைவர் இளைய பெருமாள் அவர்களை பற்றி மிக விரிவான நூல்களும் அவரது சட்டமன்ற பாராளுமன்ற உரைகளும் தொகுக்கப்பட்டு வெளிவர உள்ளன என்பது அவரது நூற்றாண்டை ஒட்டி அவரது மணி மண்டபம் திறக்கப்பட்ட சமகால நிகழ்வுகளோடு ஒட்டி காண்பது மகிழ்ச்சிக்குரியது.
ஆனால், முன்னோடி ஆளுமைகளான தந்தை சிவராஜ் எம்.சி.ராஜா, கோவை வீரையன் உள்ளிட்ட பலரின் எழுத்தும் பேச்சும் இன்னும் விரிவாக தொகுக்கப்படாமலேயே உள்ளன.
II. தந்தை சிவராஜ் அவர்களைப் பற்றி அன்பு பொன்னோவியம் வரைந்து உள்ள எழுத்துக்கள்.
III தந்தை சிவராஜ் அவர்களைப் பற்றி அம்பேத்கர் பிரியன் அவர்கள் படைத்துள்ள நூல்.
IV. இன்னும் சிலர் எழுதி உள்ள சிறிய சிறிய குறிப்புகள்.
V.தொகுக்கப்பட வேண்டிய தந்தை சிவராஜ் அவர்களின் பேச்சும் எழுத்தும்.
முடிவுரை
துணை நூல் பட்டியல்.