வாசிப்பு உருவாக்கும் நம்பிக்கை!

வாசிப்பின் ருசி:

நாம் படிக்கும் ஒவ்வொரு சிறந்த வாக்கியத்திலிருந்தும், அதன் ஓசை, அமைப்பு, தெளிவு, நயம்படு தன்மை ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறோம்.
 
ஆதலால், ஒரு பேச்சாளராக வேண்டுமெனில் – படியுங்கள்.
 
நீங்கள் சொல்வதற்கான சொற்கள் தொகை வளரும், சிந்தனைகள் கூர்மையடையும், கதைகள் வலுவடையும், அதை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் திறன் உருவாகும்.
 
 ஒரு சிந்தனையாளராக வேண்டுமெனில் – படியுங்கள்.
 
புத்தகங்கள், உங்களைவிட அறிவும் அனுபவமும் மிக்க மனிதர்களின் சிந்தனைகளுடன் உங்கள் எண்ணங்களை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன.
 
ஒரு தலைவராக வேண்டுமெனில் – படியுங்கள்.
 
ஏனெனில், மனிதர்களையும், வரலாற்றையும், அழுத்தநிலைகளையும், மனித இயல்பையும் புரிந்துகொள்ளும் மனிதர்களைத் தான் மக்கள் பின்பற்றுகிறார்கள்.
Comments (0)
Add Comment