காவிரி மேலாண்மைக் கூட்டத்தைத் தள்ளி வைக்கச் சொல்லும் அன்புமணி!

செய்தி:

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்!

டாக்டர். அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

கோவிந்த் கமெண்ட்:

காவிரிப் பிரச்சனை தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்பான பிரச்சனை.

இதில், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தேர்தல் நடந்து முடிவுகள் வருவதற்குள் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்டுவதில் அவசரம் காட்டுவது ஏன்?

இன்னும் சில நாட்கள் கழித்து தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டால் இதைவிட பொருத்தமாக இருக்குமில்லையா?

அந்த விதத்தில் அன்புமணி சொல்லுவதை வழிமொழியலாம்.

#அன்புமணிராமதாஸ் #அன்புமணி #காவிரிப்பிரச்சனை #காவிரி #தமிழ்நாடு #கர்நாடகா #புதுச்சேரி #தேர்தல் #நீர்விவாதம் #அரசியல் #AnbumaniRamadoss #CauveryIssue #KaveriWater #TamilNadu #Karnataka #Puducherry #Election #WaterDispute #IndianPolitics

Comments (0)
Add Comment