செய்தி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக வழக்கு சென்னை மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடிவரும் வழக்கறிஞர்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.
கோவிந்த் கமெண்ட்:
நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டு வருவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்பு வழங்குவதிலும் பொதுவாக ஆங்கிலத்தில் வழங்குவதுதான் இங்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. அதிலும் பிரிட்டிஷ் காலத்திய நடைமுறை இன்னும் தொடர்கிறது.
இந்தநிலையில் ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க, தொடர்ந்து பின்பற்றத்தக்க நடைமுறை.