கர்வப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை!

வாசிப்பின் ருசி:

அலைந்து திரிகிறது காற்று;
எரிந்து சாம்பலாகிறது தீ;

இருந்து கொடுக்கிறது நிலம்;
ஓடி உதவுகிறது நீர்;

எல்லாவற்றுக்கும் இடம்
தருகிறது ஆகாயம்;

யாரும் கர்வப்பட்டுக்கொள்ள
எதுவுமே இல்லை!

  • விக்ரமாதித்யன்
 
Comments (0)
Add Comment