வாக்காளர்களின் மேலான கவனத்திற்கு…!

ஜனநாயகத்தின் உயிர் உங்கள் வாக்குதான். அப்படி உயிரைப் போன்ற உங்கள் வாக்கிற்கு முன் யாரும் அளிக்கும் பணமோ, பொருளோ பெரிதானதல்ல.

உங்கள் வாக்கிற்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள்.

‘வாக்குச் சுத்தம்’ இருப்போர்களுக்கே உங்கள் வாக்கை அளியுங்கள்.

வாக்களிக்கும் முன் நீங்கள் உங்களுக்கு முன், களத்தில் நிற்கும் வேட்பாளர்க்ளின் தகுதியையும் அவர்களுடைய கடந்த காலத்தையும் எடைபோட்டு, நிதானித்து வாக்களியுங்கள்.

ஜனநாயக யுகத்தில் நீங்கள் வாக்களிக்க இன்றைக்கு உங்களுக்குக் கிடைத்ததை வைத்து வாக்களித்து விடாதீர்கள்.

உங்களின் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் வாக்களிக்கும் முன் சற்றே நினையுங்கள்.

தவறான ஆட்சி, பொறுப்புக்கு வருவது தற்செயலாக நிகழும் ஒன்றல்ல, அதற்கு நீங்களும் பொறுப்பாளி என்பதை கவனத்தில் கொண்டு வாக்களியுங்கள்.

வாக்களிக்கும் எந்திரத்தில் நீங்கள் வாக்களித்தாலும் நீங்கள் அளிக்கும் வாக்குதான் அந்த எந்திரத்தின் மதிப்பையும் கூட்டுகிறது, ஜனநாயகத்தின் மதிப்பையும் கூட்டுகிறது.

எந்த விதத்திலும் வாக்களிப்பதைப் புறக்கணிக்காதீர்கள். அப்படிப் புறக்கணிப்பது உங்கள் வாக்கை யாரோ ஒருவர் கள்ளத்தனமாக போடுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதையும் உணர்ந்து உங்களுக்காக நீங்களே வாக்களியுங்கள்.

Comments (0)
Add Comment