முழு நம்பிக்கை வரவில்லையா தோனிக்கு?

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தோனி உடல்நலம் குறித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தோனி காயத்தில் இருந்து முன்னேறி வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால், பேட்டிங்கை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது.

ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ஒரு பினிஷராக அவர் களமிறங்கும் போது, 1 அல்லது 2 ரன்களை மிக வேகமாக ஓடி எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கும்.

தற்போது விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதில் தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

வேகமாக ஓடுவதில் அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை.

அவர் அந்த நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆடும் லெவனில் இணைவார். ரசிகர்களைப் போலவே நானும் அவரது வருகைக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். விரைவில் சி.எஸ்.கே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறட்டும்.

Comments (0)
Add Comment