செய்தி:
பாஜகவில் சண்டையை ஏற்படுத்த முயற்சி!
– ஹெச். ராஜா புகார்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பு காங்கிரசுக்குள் நடந்த உட்கட்சிச் சண்டையை, தற்போது அடிக்கடி நினைவூட்டுகிறார்கள் தமிழ்நாடு பாஜகவினர்.
அவர்களுக்குள் நடக்கும் உள்குத்து வேலைகளை ஹெச். ராஜா, டெல்லிக்கு அடிக்கடி படையெடுத்து அடுத்தடுத்து புகார் கொடுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
நிலைமை இப்படியிருக்கையில் பாஜகவுக்குள் சண்டை மூட்ட இன்னொரு கட்சி வர வேண்டுமா?
அந்த வேலையைத்தான் இவர்களே செய்துவிடுகிறார்களே!