செய்தி:
தமிழகத்தில் பாஜகவை ஆழமாக வேரூன்ற வைத்த கட்சி திமுக; வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலையாக இருக்கச் செய்தது திமுக தான்; திமுக தான் பாரதிய ஜனதாவின் மெயின் டீம்!
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே தவெக தலைவரான விஜய் திமுகவுக்கும் பாஜகவிற்கும் இடையில் மறைமுகக் கூட்டணி இருக்கிறது என்பதை தொடர்ந்து பல கூட்டங்களில் சொல்லி வருகிறார்.
தற்போது சீமானும் ஒருபடி மேலே போய், திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்று விஜய் சொல்வதை வழிமொழிகிறார்.