செய்தி:
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள், சாராயத்தை ஒழிப்பேன் என ஏன் கூறுவதில்லை? : தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
சீமானின் இந்தக் கருத்து வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
பல்வேறு விதமான இலவசங்களை அறிவிக்கிற, திடீரென்று வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கிறவர்கள் எல்லாம், ஏன் மதுவிலக்கு பற்றி பேசாமல் போனார்கள் என்கின்ற மக்கள் நலன் சார்ந்த ஒரு கேள்வியை சீமான் முன்வைத்திருக்கிறார்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.55,000 கோடி அளவுக்கு வருமானம் வரக்கூடிய மது விற்பனைதான் பல்வேறு விதமான இலவசங்களைக் கொடுப்பதற்கான மறைமுக முதலீடாகவும் இங்கு இருக்கிறது.
ஆக, இங்கு ஆட்சிக்கு வர முயற்சி செய்யும் எந்த கட்சியும், வருவாய் தரக்கூடிய மது விற்பனையை நிறுத்திவிட்டு, எப்படி மதுவிலக்கை அமல்படுத்த உறுதிமொழி கொடுக்கும்?
முன்பு மது விற்பனையினால் இளம் விதவைகள் தமிழகத்தில் அதிகமாமாகி இருப்பதாகக் கணக்குச் சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்ததும் அத்தைய கணக்குகளை எல்லாம் வெகு சுலபமாக மறந்து போனார்கள்
எனவே, சீமானின் எந்த கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, இந்தக் கருத்து வரவேற்க தகுந்த கருத்துதான்.