வாசிப்பின் ருசி:
அப்போதுதான் அந்தப் பூ
உதிர்ந்திருந்தது.
நன்றாகத் தரையில்
குப்புற அமரச் சிறிது நேரம்
எடுத்துக்கொண்டது.
மறுபடியும் அது கிளையைப் பார்க்கவில்லை.
இதுவரை மலர்ந்திருந்ததற்கான
எந்தத் தற்பெருமையும்
அதனிடம் இல்லை.
இப்போது
உதிர்ந்துவிட்டதற்கான
கழிவிரக்கமும், தன்
ஒரு இதழ் மீது ஏறி அடுத்த
இதழுக்குப் போனபடி இருந்த
எட்டுக்கால் பூச்சியின் மீது
எந்தப் பராதியும் கிடையாது.
அது அப்படியே இருந்தது,
ஒரு விடையைச்
சரியாக
எழுதிவிட்டது போல…!
– கவிஞர் கல்யாண்ஜி