செய்தி: அண்டை மாநிலங்களிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல்: மாநில எல்லையில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரம்.
கோவிந்த் கமெண்ட்:
தற்போதுள்ள திமுக ஆட்சியில் மீது சுமத்தப்பட்ட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று போதைப் பொருட்களின் புழக்கம் பன்மடங்கு அதிகரித்து விட்டது என்பதே.
அதற்கேற்ப, இங்கு ஏற்கனவே கூடுதலான கஞ்சாவும் நவீன போதைப் பொருட்களும் அளவுக்கு மீறி இங்கு விற்பனை செய்யப்பட்டு, பிடிபட்டும் இருக்கின்றார்.
இதனால், பள்ளியில் படிக்கிற மாணவ, மாணவிகளில் துவங்கி, கல்லூரியில் படிக்கிற மாணவ மாணவிகள் வரை பலரும் போதை வஸ்துக்களைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமான சமூக குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அன்றாட செய்திகளாக நாம் பார்க்க முடிகிறது.
ஏற்கனவே ஏகப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகள் இங்கு நிலுவைகள் இருக்கின்றன.
தற்போதும் அண்டை மாநிலத்திலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வருகிறவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபடுவதை நாம் செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமயத்தில், இத்தகைய ஏற்பாட்டை காலம் கடந்தாவது தமிழக காவல்துறை தடுத்து, நடவடிக்கை எடுத்தால், ஏற்கனவே போதையின் பிடியில் இருக்கும் தமிழகத்தை சிறிதாவது தடுத்த உணர்வு ஏற்படும்.