செய்தி:
சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் சர்வேக்கள் என்கிற பெயரில் பல்வேறு ஊடகங்களில் ஒருவித மாயாஜாலங்கள் நடக்கும்.
சில கட்சிகளின் மீது மட்டும் ‘ஃபோக்கஸ் லைட்’டை போட்டு, மற்றக் கட்சிகளின் மீது லைட்டை ஆஃப் பண்ணி, அவரவர் விருப்பப்படி அல்லது யார் அவர்களை வழிகாட்டி வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்களோ அதன்படி பல்வேறு எண்ணிக்கைகளும் சதவீத கணக்குகளும் சர்வே என்கிற பெயரில் ஊடகங்களில் தொடர்ந்து முன் வைக்கப்படும்போது ஒரு காலத்தில் ஆச்சரியமாகப் பார்த்த பார்வையாளர்களும் உண்டு.
ஆனால், இப்போது சர்வே என்ற பெயரில் ஊடகங்களில் யாராவது ஓங்கிய குரலில் பேச ஆரம்பித்தாலே, பார்க்கும் பார்வையாளர் கொட்டுப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதுதான் சர்வேக்களுக்கான வாய்திறந்த விமர்சனமாக இருக்கிறது.
இத்தகைய சர்வேக்களை எப்போது தடை பண்ணினாலும், இப்போதைக்கு யாரும் அதை பெரிதாக நினைப்பதில்லை.