செய்தி:
தேர்தல் ஆணைய கெடுபிடியால், நாமக்கல் நகைக்கடைகளில் ரூ. 10 கோடி வர்த்தகம் பாதிப்பு!
– 500 தொழிலாளர்கள் வேலை இழப்பு.
கோவிந்த் கமெண்ட்:
நகைகளோ, வெள்ளிப் பொருட்களோ வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதை மறித்து பறிமுதல் செய்து கொண்டே போனால், நகைக்கடைக்காரர்கள் எப்படித்தான் வணிகம் செய்ய முடியும்?
இதனால், நிகழும் வேலையிழப்புகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லும்?
ஒருபக்கம், வங்கிக் கணக்கில் பணம் போடுகிறார்கள். மறுபக்கம், நேரடியாக பொதுமக்களின் பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
யாரைத்தான் நம்புவார்கள் நம்முடைய வாக்காளப் பெருமக்கள்?