செய்தி:
உலகில் 58 சதவீத நாடுகளின் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தத் தடை.
– யுனெஸ்கோவின் புள்ளிவிவரங்களில் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
செல்போன் பயன்பாடு என்பது பலருடைய செயல்பாடுகளைக் குலைத்துக் கொண்டிருக்கிறது என்பது நடைமுறை உண்மை.
அதுவும் இளம் மாணவர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன செல்போன்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
மனம் ஒருமித்து செயலில் பயனப்பட்டால்தான் கல்வி கற்கவே முடியும்.
அதற்கு, இடையூறாக இருக்கும் செல்போன்களைப் பள்ளிகளில், அதுவும் இத்தனை நாடுகளில் பயன்படுத்தத் தடை விதித்திருப்பது ஒருவிதத்தில் ஆரோக்கியமானது தான்.