கடனை வசூலிப்பதில் கூட எவ்வளவு பாகுபாடு!

செய்தி:

ரூபாய். 2,900 கோடி வங்கிக் கடன் மோசடி!

– அனில் அம்பானியிடம் சி.பி.ஐ. விசாரணை.

கோவிந்த் கமெண்ட்:

பல ஆயிரங்களையும், சில லட்சங்களையும் வங்கியில் கடனாக வாங்கி விட்டவர்களின் சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்வார்கள், அவமானப்படுத்துவார்கள், அவர்களின் உயிரிழப்புக்கே கூட காரணமாவார்கள்.

ஆனால், அம்பானி போன்றவர்கள் 2,900 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் பட்டிருந்தாலும், சிபிஐ ஆக இருந்தாலும் கூட மிக மெல்லியதாகவே சுதாரித்து விசாரிப்பார்கள்.

கடன் வாங்குவதிலும், அதை வசூலிப்பதிலும் தான் எவ்வளவு பாகுபாடு.

Comments (0)
Add Comment