செய்தி:
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை.
கோவிந்த் கமெண்ட்:
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணை சிபிஐ கைக்குப் போனாலும் போனது, நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
தவெக தலைவரான விஜய் இதுவரை மூன்று தடவை நேரடி விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகி, அவரும் பல மணி நேரம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்து, கடந்த முறை மலர்ச்சியான முகத்துடன் வெளிவந்து ரசிகர்களுக்கு கைகாட்டித் திரும்பி இருக்கிறார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அண்ணாமலை பாணியில் சொன்னால், அவரும் பதற்றத்திற்குள்ளாகி தற்போது டெல்லி சிபிஐ அலுவலகத்திற்குச் சென்று 6 மணி நேரம் வரை விசாரணைக்கு ஈடு கொடுத்து திரும்பியிருக்கிறார்.
எல்லாம் சரி, விசாரணை முடிந்து சிபிஐ விசாரணை அறிக்கை என்ன சொல்லப் போகிறது, எப்போது அந்த அறிக்கை வெளிவரப் போகிறது?