சிலைகளை மூடுவதா, வேண்டாமா?

செய்தி:

மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டியதில்லை!

– தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் அறிவுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலே, பல அரசியல் தலைவர்களின் சிலைகளை எப்படியாவது மூடி, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை மிகவும் பரிதாபமாக வைத்திருப்பார்கள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றும் அதிகாரிகள்.

இப்போதுதான் தேர்தல் அதிகாரிகளுக்கு உறுத்தியிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை, சிலைகளை மூடும் பரிதாபம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Comments (0)
Add Comment