ரஜினி பற்றிய பேச்சு: மன்னிப்புக் கேட்ட ஆதவ்!

செய்தி:

சென்னையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ரஜினியின் அறிக்கையை படித்ததாகவும் அதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டதாகவும் கூறியிருக்கிறார்.

கோவிந்த் கமெண்ட்:

ஆதவ் அர்ஜுனா, ரஜினி பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி 5 நாட்களுக்கு மேலாகிறது. அதற்குள் பல்வேறு கட்சித் தலைவர்கள் பதில் சொல்லி ஆதவ் அர்ஜுனாவை பதவி விலகச் சொல்லியெல்லாம் வற்புறுத்தி ஓய்ந்து போய்விட்டார்கள்.

ரஜினியும் பொறுமையுடன் காத்திருந்து, “காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்” என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகே, அதாவது ரஜினியின் பாணியில் சொன்னால், இத்தனை நாள் காத்திருந்து பதில் சொல்லி இருக்கிறாரா ஆதவ்?

Comments (0)
Add Comment