செய்தி:
ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1.26 கோடி பறிமுதல்; அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்!
– தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல் முடிகிறவரை எத்தனை கோடிகள் பிடிபட போகின்றனவோ தெரியவில்லை. ஆனால், எப்போதுமே தேர்தல் நேரத்தில் எலிக்குஞ்சுகள் மட்டுமே மிகச் சரியாக பிடிபடுகின்றன. பெரும் யானைகள் மிகச் சரியாக தப்பித்துவிடுகின்றன.