பொதுவுடமைக் கட்சியின் பளிச் கேள்வி!

செய்தி:

காங்கிரசுக்கு 60 சீட் கூட கொடுக்கட்டும்; எங்களுக்கு ஏன் குறைக்க வேண்டும்?

– மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி.

கோவிந்த் கமெண்ட்:

பொதுவுடமைக் கட்சிக்காரர்கள் தன்னை மட்டுமல்ல, தனக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களையும் சரியாக எடைபோட்டு வைத்திருப்பார்கள்.

ஏற்கனவே தேர்தல் களத்தில் அனுபவம் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தற்போது காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சியையே எடைபோட்டு தன்னுடைய எடையையும் சரியாக கணக்கிட்டு இந்தக் கூரான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Comments (0)
Add Comment