விஜய்யுடன் கூட்டணி – தவெக புது நிபந்தனை!

செய்தி:

விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டால் கூட்டணி!

– செங்கோட்டையன் சூசகம்.

கோவிந்த் கமெண்ட்:

அதிமுக பாஜக கூட்டணியில் தவெக சேரப் போகிறது என்பது மாதிரியான வதந்திகளும், கூடவே விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள் எங்கிருந்தோ தேடிப்பிடித்து வதந்திகளாக செய்திகளை வெளியிட்டுக் கொண்ருக்கும்போது, தவெகவிலிருந்து நெத்தியடி மாதிரியான இத்தகைய பேச்சை வெளியிட்டிருக்கிறார் பழுத்த அரசியல்வாதியான செங்கோட்டையன்.

இதற்கான பதிலை அதே கொங்கு மண்டல சகாவான எடப்பாடி பழனிசாமிதான் நிதானமாகச் சொல்ல வேண்டும்.

 

Comments (0)
Add Comment