வாசிப்பின் வலிமை:
செத்துப் போகும் ஒவ்வொரு குழந்தையும் என் குழந்தை தான்.
ஒப்பாரி வைக்கும் ஒவ்வொரு அன்னையும் என் அன்னை தான்.
அழுது புலம்பும் ஒவ்வொரு தந்தையும் என் தந்தை தான்.
இடித்துத் தூளாக்கப்படும் ஒவ்வொரு வீடும்
நான் வளர்ந்த வீடு தான்.
எல்லை கடந்து தன் சகோதரனின்
பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு நகரும்
ஒவ்வொரு சகோதரனும் என் சகோதரன் தான்.
வீட்டுக்குத் திரும்பி வர முடியாமல்
போகும் ஒவ்வொரு சகோதரியும் என் சகோதரிதான்.
இவர்கள் ஒவ்வொருவரும் நம்மவர்தான்
நாம் எப்படி அவர்களுடையவர்களாக இருக்கிறோமோ அதுபோல.
நாம் அவர்களுக்கு சொந்தம் ஆகிறோம்.
அவர்கள் நமக்குச் சொந்தமாகிறார்கள்.
– ஜேம்ஸ் பால்ட்வின்
தமிழில்: இந்திரன்