அதிமுகவில் இத்தனைத் தொய்வுகள் ஏன்?

செய்தி:

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொய்வு ஏன்?

– மாவட்டச் செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்.

கோவிந்த் கமெண்ட்:

“ஒன்றா.. இரண்டா.. எடுத்துச் சொல்ல” என்று ஆரம்பிக்கிற திரைப்படப் பாடலின் முதல் வரியைப் போலவே, அதிமுகவின் பல்வேறு தொய்வுகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால், அதன் சாதாரண தொண்டர்களுக்கு தலை சுற்றிவிடும்.

அத்தனைத் தொய்வுகள் அதிமுக தலைமையிலேயே நடந்திருக்கும்போது, தொண்டர்களின் மத்தியில் இதற்கு பஞ்சம் இருக்குமா என்ன?

தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழி தான் தொண்டர்களும்.

Comments (0)
Add Comment