தேர்தல் காலத்தில் பஞ்சமில்லாத பஞ்ச் டயலாக்…!

செய்தி:

“டப்பு டப்புன்னு இரட்டை இலையைப் பார்த்து அமுக்குங்க… பட்டு பட்டுன்னு உங்க வீட்டில் ரூபாய் பத்தாயிரம் வந்துவிடும்”

– முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலகலப் பேச்சு. 

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே தவெக தலைவரான விஜய் பஜக் பஜக்-னு விசில் சின்னத்தை அமுக்கி, ஓட்டு போடுங்கன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை பேசி ஆரம்பிச்சு வைச்சாலும் வைச்சார், அதற்குப் பிறகு அதிமுக உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விசில் ஊதாத குறையாக பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதே விதமாகத்தான் கடம்பூர் ராஜூவும் குறிப்பிட்ட சத்தத்தோடு, தனது டயலாக்கை பேசி இருக்கிறார்.

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை பஞ்ச் டயலாக்குகள் வாக்காளர்கள் காதுகளுக்குள் பூரான் புகுவது போல நுழையுமோ தெரியவில்லை.

 
Comments (0)
Add Comment