நிழலின் இரைச்சல்!

வாசிப்பின் ருசி:

சத்தமில்லாமல் தான்
இழுத்துக்கொண்டு போகவேண்டும்
என் நிழலை
என்றே முனைந்தேன்;
தரதரவென்று
ஒரே இரைச்சல்.

என்ன செய்ய?
என் வாழ்வின் தரை அப்படி!

📚 – கல்யாண்ஜி

Comments (0)
Add Comment