பட்ஜெட் மாற்றம்: மக்களின் வாழ்நிலை?

செய்தி:

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

கோவிந்த் கமெண்ட்:

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பட்ஜெட் தாக்குதலுக்கு முன்பே தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள், சிறு தொழில் செய்து வந்தவர்கள் சரிவைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி கொண்டு வந்த மாற்றத்திற்குப் பிறகும் இதுதான் நிலை. இந்தநிலையில், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட், சராசரி மக்களின் வாழ்நிலையில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்?

Comments (0)
Add Comment