செய்தி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 30 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை.
– கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குச் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை.
கோவிந்த் கமெண்ட்:
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அது எவ்வளவு பேரை பாடாய் படுத்துகிறது, பாருங்கள்.
குறிப்பாக, இந்தளவுக்கு விலை உயர்த்தப்பட்டிருப்பதால், கிரிமினல்கள் தான் மேலும் சுறுசுறுப்பாகி மிகவும் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நாம் என்ன சொல்ல முடியும்? ‘நகைகள் அணிபவர்கள் ஜாக்கிரதை’ என்றுதான் தற்காலத்திற்கு ஏற்ப சொல்ல முடியும்.
எப்படியோ, இந்த விலை உயர்வு, கிரிமினல்களுக்கு ‘பொற்’காலமாகி விடக்கூடாது.