கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார்.
அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு ‘நீர்க்குமிழி’ மூலம் இயக்குநராகவிட்டார் கே.பி.
“இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால், அதற்கு முதல் காரணம் எம்.ஜி.ஆர். அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை” என கே.பாலசந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
குறிப்பு: கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியின் திருமண விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மாவுடன் கே.பி.