திரைப்படங்களில் சமத்துவத்தைப் பரப்பிய எம்.ஜி.ஆர்!

சாண்டோ சின்னப்ப தேவரின் ‘தனிப்பிறவி’ படத்தில் பாடல் காட்சியொன்றில், முருகப் பெருமானாக  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.

கையில் வேலும் கூடவே மயிலும் இருக்க முருகனாகவே மாறியிருப்பார்.

அதேபோல், ‘பரமபிதா’ என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர்.

ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள்.

திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால், படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ‘மலைக்கள்ளன்’, ‘ஆனந்தஜோதி’ உள்ளிட்ட படங்களில் முஸ்லீம் வேடத்திலும் நடித்துள்ளார்.

அந்தக் கால திரைப்படங்களிலேயே மதநல்லிணக்க சிந்தனையோடு சமத்துவத்தைப் பரப்பிய தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களையே சாரும்.

Comments (0)
Add Comment