இளம்வயது மகனுடன் மலேசியா வாசுதேவன்!

நேற்றைய நிழல்:

‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலேசியா வாசுதேவன்.

அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்’ என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்துச் சென்றது.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவனின் மகன்தான் பாடகரும் நடிகருமான யுகேந்திரன்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவரான யுகேந்திரன் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

இவர் 2001-ம் ஆண்டு வெளிவந்த இவர் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும், இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார்.

மலேசியா வாசுதேவன் மறைந்த பிறகு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் யுகேந்திரன். தமிழ் சினிமாவில் நடிப்பதையோ பாடுவதையோ சுத்தமாகவே நிறுத்திவிட்டார். வெளிநாட்டில் செட்டில் ஆன அவர் அங்கு ரம்புட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் இசை கான்செர்ட்டுகளை நடத்தி வருகிறார்.

குறிப்பு: இளம்வயது மகனுடன் தந்தை எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.

#Yugendran #singerYugendran #யுகேந்திரன் #Vasudevan #singerVasudevan #மலேசியாவாசுதேவன் #MalaysianVasudevan #செவ்வந்திப்பூமுடிச்ச #ஆட்டுக்குட்டிமுட்டையிட்டு #கோவில்மணிஓசை #வான்மேகங்களே

 
 

 

Comments (0)
Add Comment