28/04/1959ல் – தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள்.
அருமை நிழல்:
பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும் வண்ணம், அள்ளி ஓர் இலக்கம் தந்த அண்ணல் கணேசர் – இந்நாள் புள்ளினம் பாடும் சோலைமதுரையின் போடி தன்னில்..
உள்ளதோர் தொழிற் பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார்.
இன்றீந்த வெண்பொற் காசோ – இரண்டரை இலக்கமாகும்.! நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற, குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார் போல என்றெந்த நடிகர் ஈந்தார்..? இப்புகழ் யாவர் பெற்றார்.?
– பாவேந்தர் பாரதிதாசன்.
படம் உதவி: திரு. Raja Ravanan Sivagirippatti Palani
நன்றி: இசை இன்பன் முகநூல் பதிவு