நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!

அருமை நிழல்:

1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன் வெளியானது, அதோடு 7,00,000 ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் திரைப்படம் என கூறப்படுகிறது.

சிறந்த படைப்பாக உருவான ‘படையப்பா’ மாநில அரசின் 5 விருதுகளைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அவரது நடிப்பிற்கு நிறைய விருதுகள் கிடைத்தன.

இனி எத்தனை மாஸான படங்கள் வந்தாலும் அசைக்க முடியாத ‘படையப்பா’ மொத்தம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாராகி சுமார் ரூ. 60 கோடியை வசூலித்தது.

குறிப்பு: படப்பிடிப்பின்போது ரஜினிக்கும் ரம்யாகிருஷ்ணனுக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Comments (0)
Add Comment