ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருந்து வாசகர் ஸ்ரீனிவாசன் எனக்கு போன் செய்தார்.
அவர் அப்போது சொன்ன ஒரு செய்தி, என் மனதுக்குள் தென்றலை வீச வைத்தது.
“ஸார்… நான் இப்ப ஈரோடு புத்தகக் கண்காட்சியில், மீனாட்சி புத்தக ஸ்டாலிலிருந்து பேசிட்டு இருக்கேன்.
கொஞ்ச நேரத்துக்கு முந்தி ரெண்டு காலேஜ் பசங்க இந்த ஸ்டாலுக்கு வந்தாங்க. அவங்க ஸ்டாலை சுற்றிப் பார்த்துட்டு கடைசியில் நீங்க எழுதிய ரெண்டு புத்தகங்களை வாங்கினாங்க.
அதுல ஒரு புத்தகம், ‘ஸார் ஒரு சந்தேகம்’.
அடுத்தது, ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம் தான்’.
நான் அவங்ககிட்ட பேச்சு கொடுத்தேன்.
அவங்க, “பிஎஸ்சி ஃபாரன்ஸிக் கோர்ஸ் படிப்பதாகவும், ராஜேஷ்குமாரோட புக்ஸ்ல பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கும்ங்கிறதால, இந்த புத்தகங்களை வாங்கினோம்”ன்னு சொன்னாங்க.
எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு ஸார். அதான் உங்களுக்கு உடனடியா போன் பண்ணினேன்.
இந்த டிஜிட்டல் யுகத்துல மாணவர்கள், காசை கண்டபடி செலவு பண்ணாமே, புத்தகங்களை வாங்கி படிக்கிறாங்கங்கறது எவ்வளவு பெரிய விஷயம்.
வாசிப்புப் பழக்கம் இல்லையென்னு யார் சொன்னாலும் இன்னும் இருக்குன்னு காலம் சொல்லிகிட்டு இருக்கு ஸார்.
நம்ம மக்கள் இப்பத்தான் கருப்பட்டி காஃபி, பழைய சோறு, தினை, கம்பு, ராகி, குதிரைவாலின்னு ஆர்கானிக் உணவு பழக்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றாங்க.
சீக்கிரத்திலேயே புத்தக வாசிப்பு பழக்கத்துக்கும் திரும்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
– எழுத்தாளர் ராஜேஷ்குமார்
நன்றி: எழுத்தாளர் ராஜேஷ்குமார் முகநூல் பதிவு.