இருவாட்சி மூட்டில் கீரிப் பிள்ளைகள் புரள்வது போல….!

இலக்கிய ரசனை:

எழுதுகிறவன், வாசிக்கிறவன் என்கிற கூத்து எல்லாம் இருக்கட்டும்.

ஒரு எழுபத்தேழு, எழுபத்தெட்டு வயது அன்றாடனுக்கு தூக்கம் வருவதற்கும் தூக்கம் வராமலே போவதற்கும் பிரத்யேகக் காரணங்கள் இது இது என்று சொல்ல முடிவதில்லை.

நேற்றுத் தூக்கம் வரவில்லை.

வரவில்லை என்றால் வரவில்லை. அவ்வளவுதான்.

தூக்கம் வராமல் இருக்கும் போதில் தூக்கம் வருவதற்காக எந்த முயற்சியையும் நான் செய்வதில்லை. அப்படிச் செய்தால் மேலும் தூக்கம் வராது போகும். அது தானாக வரும்.

ஜன்னல் கம்பி வழி வரும் காற்றுப் போல, பூனைக்குட்டி போல. பூ விரியத் துவங்கிய இருவாட்சி மூட்டில் கீரிப் பிள்ளைகள் புரள்வது போல.

– எழுத்தாளர் வண்ணதாசன்.

Comments (0)
Add Comment