அச்சுறுத்தும் காற்று மாசு… என்ன செய்யலாம்?

டெல்லியில் காற்று மாசின் அளவு அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாக காற்று மாசு என்பது வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் மூலமாகவும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலமாகவும்,

பென்சீன், ஃபார்மால்டிகைடு போன்ற ரசாயனங்கள் மூலமாகவும், திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் வாயுக்கள் மூலமாகவும் ஏற்படுகிறது

உலக மக்கள் தொகையில் 90% அதிகமானோர் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனையான இந்த காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குளிர்காலத்தில் வழக்கமாகவே காற்று மாசு அதிகமாக காணப்படும்.

இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளியை ஒட்டி மிக அதிகமாகவே உள்ளது. செயற்கை மழையைக் கொண்டு வந்து காற்று மாசை தணிக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தலைநகரில் காற்று மாசை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தலைநகரில் காற்றின் தர குறியீடு 400க்கு மேல் அதிகமாக பதிவாகி மிகவும் மோசமான நிலையில் தற்போது உள்ளது.

இதனால் சுவாசிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். இது பெருமளவில் காற்று மாசை குறைக்க உதவும்.

சீன தலைநகரான பெய்ஜிங்கில் கடுமையான மாசு கட்டுப்பாட்டு கொள்கை மற்றும் தூய்மையான எரிசக்தியை ஏற்றுக் கொண்டதன் மூலமாக சமீபத்திய ஆண்டுகளில் காற்றுமாசு கணிசமாக குறைந்துள்ளது.

அதேபோன்று அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கடுமையான காற்று தர விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு தூய்மையான போக்குவரத்து முறைக்கு மக்கள் மாறியதன் காரணமாக நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

நாமும் அதே போல் கரியமில வாயு வெளியீட்டைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலம் இந்தக் காற்று மாசு பிரச்சனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

Comments (0)
Add Comment