ரசனையால் உயிர் வாழும் உலகம்!

வாசிப்பின் ருசி:

ஒரு பரமானந்தம் வாழ்க்கையின் சிகரமாக ஏதோ ஒரு வேளையில் ஏற்படுகின்றது. அதற்கு மேல் வாழ்க்கை உயர்வடைய முடியாது.

துடிதுடித்து, உவகையில் தன்னை மறந்திருக்கும் நிலையிலேயே அந்தப் பரவசம் பிறக்கின்றது.

திரைச் சீலையிலே உருவாகிக் கொண்டிருக்கும் உணர்ச்சி பொங்கும் ஓவியத்திலே உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கும் கலைஞனுக்குத் தன்னை மறந்த நிலையிலே அந்தக் கழிப்பேருவகை வாய்க்கின்றது.

படுகளத்தில் போர் வெறியோடு நிற்கும் வீரனுக்கு அது கிட்டுகின்றது.

– ஜாக் லண்டன் எழுதிய ‘கானகத்தின் குரல்’ நாவலிலிருந்து.

Comments (0)
Add Comment