திரைக்கலைஞருக்கு முக்கியமான தேவை என்ன?

இயக்குநர் சீனு ராமசாமி பதில்
கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.
 
கேள்வி: திரைப்படங்களைப் பற்றி ஆகச் சிறந்த கல்வி எது?
 
பதில்: எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
 
கேள்வி:  சினிமா தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வது எப்படி?
 
பதில்: சினிமா இயக்குநரிடம் இருந்து, திரைப்பட தொழில்நுட்ப கல்வி கற்றுத் தருபவருடன் இருந்து, திரைப்படங்களைத் துணிந்து இயக்கி பார்ப்பதிலிருந்து.
 
கேள்வி: திரைப்படத் தொழில்நுட்பத்தை மிக எளிதாக ஆழமாக புரிந்துகொள்வதற்கு வழி?
 
பதில்: எடிட்டிங்கில் பழகுவது அங்கு பணிபுரிவது, எஸ்.எல்.ஆர். கேமராவில் புகைப்படங்கள் எடுக்க கற்றுக் கொள்வது, சிறு கதை படங்கள் எடுத்து நாமே பார்ப்பது.
 
கேள்வி: சினிமாவைப் பற்றிய கல்வியில் மிக அவசியமானது?
 
சினிமா கலைஞர்களின் வாழ்க்கை கதைகள் இருந்தால் அவற்றைத் தேடிப் படிப்பது.
 
கேள்வி: திரைக்கதை எழுதுவதற்கு முதல் பயிற்சி என்ன?
 
பதில்: காரண (logics) அறிவை வலுப்படுத்துவது
 
கேள்வி: திரைக்கலைஞருக்கு முக்கியமான தேவை என்ன?
 
பதில்: நம்பிக்கையோடு உழைப்பது.
 
*
Comments (0)
Add Comment