செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது.
இதனை முன்னிலைப்படுத்தும் விதமாக 2018 செப்டம்பர் 30-ல் இருந்து சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார்.
மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் ஜெரோம் செப்டம்பர் 30-ல் இறந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை ஜெரோம் நினைவை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பு போட்டியினை நடத்தி இந்நாளை கொண்டாடுகிறது.
இந்த நாளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்துக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம் தொடங்கி இந்தியாவின் வளமான பண்பாட்டை விவரிக்கும் புத்தகம் இது.
இந்தப் புதிய பதிப்பில், ஏராளமான படங்களும் நூலாசிரியரின் இறுதிச் சேர்ப்புகளும் பாஷமின் மாணவர் பேரா. தாமஸ் ஆர். டிரௌட்மனின் முன்னுரையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இந்தியா எனும் கோணல் மரம் – பரகால பிரபாகர் (மொழிபெயர்ப்பு: ஆர். விஜயசங்கர்) – எதிர் வெளியீடு 04259 226012
எதிலும் சமரசம் நடைபெற்றுவரும் சூழலில் தீரம்மிக்கத் தன் விமர்சனக் குரலை அதிகாரத்தை நோக்கி எழுப்பியவர் பரகால பிரபாகர்.
அவரது கட்டுரைகளின் தொகுப்பு இது. ஜனநாயகம், சமூக நல்லிணக்கம் போன்றவற்றின் எதிர்காலம் குறித்து அவர் இதில் விவரிக்கிறார்.
மக்களின் தொழில்கள் சாதிகளாக மாற்றம் பெற்றதைத் தெளிவாக இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சம உரிமைக்காக நடந்த போராட்டங்கள் என சாதி பற்றிய விஷயங்களையும் சொல்கிறது இந்நூல்.
உழவர் எழுச்சி பயணம் – மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் –
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சம்யுக்த கிஸான் மோர்ச்சா என்கிற ஒரு குடையின் கீழ் விவசாய அமைப்புகள் திரண்டு, டெல்லியை நோக்கி முன்னேறின.
இந்தப் போராட்டத்தை நேர்காணல், கட்டுரை எனப் பல வடிவங்களில் விவரிக்கிறது இந்த நூல்.
மாயயதார்த்தக் கதை சொல்லல் முறைக்காகப் போற்றப்படுபவர் சல்மான் ருஷ்டி.
பம்பா என்னும் பெண் கதாபாத்திரத்தைக் கைபிடித்து தென்னிந்தியப் பின்னணியில் செல்கிறது அவரது இந்த நாவல். பம்பா வழியாக ருஷ்டியின் மாய விளையாட்டும் இதில் நடக்கிறது.
முறிநாவு – மனோஜ் குரூர் (கே.வி.ஜெயஸ்ரீ) – வம்சி 04175 235806
மறைக்கப்பட்ட, உரத்த குரலில் சொல்லப்படாத பண்பாட்டு உறவுகளில் மறைந்திருக்கும் அம்சங்களை மீட்கும் கடந்த காலப் பயணமே இந்த நாவல்.
8, 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த குமார், அலங்காரர் ஆகியோரின் கதைகளைப் பிணைக்கும் இந்தக் கதை அதன் வழி வரலாற்றை ஆழமாகச் சொல்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்து சிங்களத் தரப்பிலிருந்து கேட்கும் ஒரு குரல் இது.
தமிழர்கள் மீதான பாலியல் வன்முறையையும் ஆதாரத்துடன் முன்வைக்கிறது இந்த நூல்.
ஜனநாயகத்தின் சமூக இருப்பு
– சுந்தர் சருக்கை
(மொழிபெயர்ப்பு:
எதிர் வெளியீடு 04259 226012
பி.ஆர்.அம்பேத்கர், ஜனநாயகம் ஆட்சி வடிவம் மட்டுமல்ல; அது சமூகம், மனக்கட்டமைப்பு சார்ந்தது என்கிற கருத்தை முன்வைக்கிறார்.
இதை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகத்தைச் சமூக வாழ்க்கை வடிவமாகப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த நூல்.
ரவீந்திரநாத் தாகூரால் போற்றப்பட்ட கலை விமர்சகர் ஆனந்த குமாரசுவாமியின் நூல் இது.
இந்தியக் கலையை உலகறியச் செய்தவர் இவர். சிவ நடனத்தை விளக்கி 1912இல் ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
காதலர்களாகப் பிரிவோம் – நிசார் கப்பானி (மொழிபெயர்ப்பு:
நவீன காலத்தின் காதல் பிரச்சினைகளை நிசார் கப்பானியின் இந்தக் காதல் கவிதைகள் மெலிதாக்குகின்றன.
காதல் கவிதைகளுக்கான முன்னுதாரணமாக இந்தக் கவிதைகளை முன்னிறுத்தலாம். நேரடியாக அரபியிலிருந்து இந்தக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
– நன்றி: இந்து தமிழ் திசை
#மொழிபெயர்ப்பு #செயின்ட்ஜெரோம் #ஐக்கியநாடுகள்சபை #ஜெரோம் #சர்வதேசமொழிபெயர்ப்புதினம் #TranslationDay #Translation #SaintJerome #UnitedNations #Jerome #InternationalTranslationDay