எது சுதந்திர இந்தியா?

“இங்கே
பைத்தியக்காரர்களும்
குழந்தைகளும் மட்டுமே
நிம்மதியாக இருக்கிறார்கள்;

பெரிய அரசியல்வாதிகளும்
முதலாளிகளும் மட்டுமே
பாதுகாப்பாக இருக்கிறார்கள்;

மடாதிபதிகளும்
கதாகாலட்சேபக்காரர்களும் மட்டுமே
கவலையில்லாமல் இருக்கிறார்கள்;

எழுத்தாளர்களும்
சினிமாக்காரர்களும் மட்டுமே
சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்;

சராசரி இந்தியர்களின்
சகிப்புத்தன்மையில் மட்டுமே
தேசம்
தீப்பற்றியெரியாமல் இருக்கிறது!”

– கவிஞர் விக்ரமாதித்யன்

Comments (0)
Add Comment