சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள்!

சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள் வரிசையில் முதலில் வருபவர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். சிரி சிந்தி என்பதன் இலக்கணமே இவரது நகைச்சுவை பேச்சும், பாடலும்தான்.
 
தனித் தமிழ் வசனத்தில் தமிழ் திரை, திளைக்க ஆரம்பித்த வேளையில் நல்ல தம்பி என்னும் படத்தில் விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி….! என்று மகிழ்வு தவழும் குரலில் பாடியிருப்பார்.
 
அன்று மக்களிடம் நிலவிய மூட நம்பிக்கை ஒழிக்கும் பொருட்டே பாடுவார். பணம் மனிதர்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது, ‘எங்கே தேடுவேன் பணத்தை…’ ‘சிரிப்பு பாடலில் சதிகாரனின் சாகச சிரிப்பு ..! அடங்கி நடப்பவனின் அசட்டு சிரிப்பு’.. என்று சிரிப்புக்கு இலக்கணங்கள் வகுத்து சமூக அவல நிலையை மறைபொருளாய் உணர்த்துவார். 
 
‘பாலும் தேனும் பெருகி ஓடியது அன்றைய பாரதம்; பழைய சோத்துக்கே ததிகினதோம் தான் இன்றைய பாரதம்…..’ என்று எடுத்திடித் துரைக்க, அது பின்னாளில் சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு படி மேலே போய், ‘அழகாய் வம்சம் விருத்தி செய்தது அன்றைய பாரதம்; அளவில்லாமல் பிள்ளையப் பெறுது இன்றைய பாரதம்’’ எனக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையே வலியுறுத்தியது. இவை எல்லாம் அன்றைக்கு ஒரு கூத்திசைப் பாடல் போன்றே திரையில் பரிமளித்தது.
 
பின்னர் மெல்லிசை சற்று நேர்த்தியாக மாறி, டி.எம்.எஸ் குரலில், மலைக் கள்ளனில், ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே … நம்ம நாட்டிலே, சத்யம் தவறாம உத்தமர் போல நடிக்கிறார்..’ என்றெல்லாம் மனித அவலத்தை உரித்துப் பாடியது இன்றும் உண்மையாக உள்ளதை அறியத் தவற மாட்டோம்.
 
பராசக்தியில், ‘தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசை எல்லாம் காசு முன் நிற்காதடி… குழந்தை’ என்று தொடங்கி” … பொணத்த உள்ளே கட்டி அழுதாலும் தாண்டவக் கோனே பணப் பெட்டி மேல கண் வையடா தாண்டவ கோனே, முட்டாப் பயல எல்லாம் தாண்டவக் கோனே! காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக் கோனே’ என்று காசின் இழிநிலைத் தோன்றப் பாடும் பாட்டுக்கள் மெத்த உண்டு.
 
‘அரசிளங்குமரியில்….’ வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு, விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க.; உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க…’ என்று சின்னக் குழந்தையிடம் பாடும் பாடல் பேய் பிசாசென்றேதுமில்லை என மக்களிடை விழிப்புணர்வை ஏற்றும் பாடல்.
 
அன்றைக்கு எங்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலையில் பல பொதுவுடமைக் கொள்கை வலியுறுத்தும் பாடல்களும் இடம் பெற்றன.
 
‘இந்த மாநிலத்தை பாராய் மகனே  புது வாழ்க்கைதனை உணர்வாய் மகனே; இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா, முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா.’… என்றும், சமூகத்தில் நிலவி வந்த அதிக ஏற்ற தாழ்வை ஒரு தாலாட்டு பாட்டில், துலாபாரம் படத்தில்….’ கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி; இதயங்கள் ஏங்குது வழ்வின்றி’ என்றும் உணர்த்தப்பட்டது.
 
அதுமட்டுமல்ல, உழைப்பவர் வாழ்வே வீதியிலே, உறங்குவதோ நடை பாதையிலே; இறக்கம் காட்டத்தான் நாதியில்லே.’ என மனதில் அறைந்தாற்போல் பாடலும் உண்டு. ‘எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உண் செயல்தான் மாறாதா’ என்று ஆற்றாமையை வெளிப்படுத்தியதும் ஏராளம்.
 
வாழ்வில், மதம், உழைப்பு, வளம் பெருக்குதல் போன்ற ஒவ்வொரு அங்கத்திலும் பாமர மனிதன் ஏமாற்ற, சுரண்டப் படுகிறான் என்று, ’ மனுஷன மனுஷன் சாப்பிடாராண்டா தம்பிப் பயலே, நாம் வாழுகிற காலம் மாறுவதெப்போ தம்பிப் பயலே‘ என்று இடித்துரைக்கவும் தவறியதில்லை.
 
பாவ மன்னிப்பு படத்தில் …’ வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாரும் மாற வில்லை… மனிதன் மாறிவிட்டான் மதத்தை ஏவி விட்டான்….’ என்று மத சம்பந்த அவல நிலையை பறை சாற்றியது.
 
ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே, அவனை உயர்த்தி பேசும் மனித கூட்டம் நாளும் தப்பாது….’ இன்றும் அப்படித்தானே. இவைகளைத் தொடர்ந்தே பின்னர் அறிவுறுத்தும் பல பாடல்கள் வரலாயின.
 
பாவ மன்னிப்பு படத்தில் …’வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாரும் மாறவில்லை…மனிதன் மாறி விட்டன மதத்தை ஏவி விட்டான்….’ என்று மத சம்பந்த அவல நிலையை பறைசாற்றியது. இதன் பின்னரே அறிவுறுத்தும் பாடல்கள் வரலாயின.
 
– நன்றி: கோதை தனபாலன் முகநூல் பதிவு
 
#Nallathambi #விஞ்ஞானத்தைவளர்க்கப்போறேண்டி #VignaanaththaiValarkkaPoraendi #என்எஸ்கிருஷ்ணன் #நல்லதம்பி #சத்யம்தவறாமஉத்தமர்போல #பாலும்தேனும்பெருகிஓடியது #மலைக்கள்ளன் #தத்துவபாடல்கள் #எத்தனைகாலம்தான் #தாண்டவக்கோனே #பராசக்தி #துலாபாரம் #அரசிளங்குமரி #வேப்பமரஉச்சியில் #nsk #thathuvapaadalgal #sathyamthavar #palumthenum #malaikkallan #ethanaikaalm #thandavakone #parasakthi #thulabalarm #arasliangumari #veppamarauchi
Comments (0)
Add Comment