தமிழக அரசு ஒத்துழைப்புடன் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா, முதல் செப்டம்பர் 7 வரை நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்த புத்தகக் கண்காட்சியில், 128 அரங்குகளில், நூற்றுக்கணக்கான தலைப்புகளில், பல்வேறு வயதினருக்கு ஏற்ற வகையில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புத்தகக் கண்காட்சியில், குழந்தைகளின் அறிவுசார் நிகழ்வுகள், மாலையில் மிகப்பெரிய ஆளுமைகளின் உரைவீச்சு, கண்கவர் அறிவுசார் கலைநிகழ்ச்சிகள் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அறிவை வளர்க்கும் விதமாக நடைபெற்று வரும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஏராளமான நூல்களைத் திரளானோர் வந்து வாங்கிச் சென்று பயனடைந்து வருகின்றனர்.