ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில், “அனைவரும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும்போது அவருடைய வழக்கமான பாணியில் விலாசித் தள்ளிவிட்டார்.
“முன்பு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என்று முதலில் சொன்னார்கள். பிறகு ஒரு குழந்தை போதும் என்று சொன்னார்கள். பிறகு, நாமே குடும்பம் நமக்கு எதற்கு குழந்தை என்று சொன்னார்கள்.
இப்படிப் பல விஷயங்களில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியவர்கள் ஒருபுறம் இருக்கும்போது, மோகன் பகவத் இப்படி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
உணவு விஷயத்தில், நாம் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அவர்கள் தலையிடுகிறார்கள். உணவு, மதத்தைத் தீர்மானிப்பது மாதிரி குடும்பக் கட்டுப்பாடு விஷயத்திலும் தீர்மானிப்பது எந்த அளவில் நல்லதாக இருக்கும்?
ஒருவர் ஒரு குழந்தையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஆறு குழந்தைகளும் பெற்றுக் கொள்ளலாம். இது அவரவருடைய விருப்பம் சார்ந்த ஒன்று.
இதில் எல்லாம் மதரீதியான கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்.