ஒரு பாடலுக்குள் எட்டு திருக்குறளை வைத்த கவியரசர்!

தமிழ்த் திரையுலகில் பல தத்துவப் பாடல்களைத் தந்து சிகரம் தொட்டவர் கவியரசர் கண்ணதாசன்.

அவர் ஒரு பாடலில் எட்டு திருக்குறளை ஒரே பாடலில் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். அந்தப் பாடல், ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை  ஆறு” என்ற பாடல்.

“ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி”

1. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் (293)

“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி…

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

2. இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)

“இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…”

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….”

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு. (387)

“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்.”

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது. (124)

“நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.”

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம். (35)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு. (110)
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

6. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)

இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு. (571)

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு….

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment