தெருமுனையில் பிரளயனின் சமூக உணர்வு நாடகங்கள்!

🔥காவேரிக் கரையோரோம் உள்ள மயிலாடுதுறையில் மாநில அளவிலான தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

🔥இதையொட்டி தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் மூத்த நாடகவியலாளரான பிரளயன், தன் நாடகக் குழுவினர் மூலம் தெரு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.

🔥இதன் ஒருபகுதியாக, தோல் பதனிடும் தொழிலாளர்கள், வீரம் செறிந்த போராட்டம் நடத்திய திண்டுக்கலில், தீண்டாமைக்கு எதிராக ‘பட்டாங்கில் உள்ள படி’ என்ற நாடகம், பாடல்களுடன் பொதுமக்கள் முன்னிலையில், தெருவிலேயே அரங்கேற்றம் செய்யப்பட்டது.

🔥தமிழகக் காவல் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரை மனிதநேயம் இல்லாம்மால் நடத்துவது, வன்கொடுமைச் சட்டத்தை முறையாக பின்பற்றம்மால் இருப்பது, ஆதிக்க சாதிகாரர்களுடன் காவல்துறை எவ்வாறு கைகோர்கிறது என்பதை எல்லாம் இந்த நாடகத்தின் மூலம், தத்ரூபமாக சாமானிய மக்கள் மனதில் காட்சிபூர்வமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் பிரளயன். 

🔥சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தாழ்த்தபட்டோர் இறந்தால் பிணத்தை பொது சாலையில் கொண்டு செல்லமுடியவில்லை என்கின்ற எதார்த்தத்தை வெளிப்படையாக மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார் பிரளயன்.

🔥தமிழகத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக முதல் கலகம் செய்தவர்கள் சித்தர்கள். அடுத்து வள்ளாளர். தன்னுடைய கலைப்பயணத்திற்கு நடுவே, இந்தக் கலகக் கருத்துக்களை முன்வைத்து, அதை நாடகமாக ‘அணையா நெருப்பாக’ திண்டுக்கல்லில் பற்ற வைத்த பிரளயன் அவர்களுக்கும் குழுவினர்களுக்கும் திண்டுக்கல் மக்கள் சார்பாக நன்றிகள். பாராட்டுக்கள்.

🔥தமிழகத்தில் தெரு நாடகங்கள் துவங்கி, மேடை நாடகங்கள் வரை பல்வேறு சமூக நிகழ்வுகளைப் பற்றி நாடகங்களை நிகழ்த்தி இருக்கிற நாடகவியலாளரான பிரளயன், பல்வேறு சமூக அவலங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அதற்கான விமர்சனக் குரலாக தன்னுடைய நாகத்தைப் பயன்படுத்தி, அதை, எளிமையாக தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் நிகழ்த்தும் நாடகக் கலைப் பயணத்திற்கு வாழ்த்துகள்.

ச.கணேசன்
மாவட்டக்குழு உறுப்பினர்,
சி.பி.(ஐ)எம், திண்டுக்கல்.

Comments (0)
Add Comment