டேவிட் ஒரு ஹங்கேரிய – ஆங்கிலேய எழுத்தாளர். கனடிய தாய்க்கும் ஹங்கேரியத் தந்தைக்கும் பிறந்தவர். பலவிதமான மார்க்கெட்டிங் வேலைகளில் பணிபுரிந்த டேவிட் முழுநேர எழுத்தாளராக விரும்பி ஹங்கேரிக்குக் குடிபுகுந்தார். இவருடைய ஆறாவது நூலிது.
Harold Robinsஐ கல்லூரி படிக்கையில் ஒளித்துவைத்துப் படிப்போம். திரில்லரைவிட பாலியல் வர்ணனைகள் அப்போது அதிகம் கவர்ந்தது.
இந்த நாவலில் ஏராளமான பாலியல் நடவடிக்கைகள் Graphics ஆக வரும்பொழுதும் நாவல் ஒரு தனிமனிதனின் Inner turmoilsஐச் சொல்லாமல் சொல்கிறது.
István ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். நாவல் முழுவதும் அவனைச் சுற்றியே அல்லது அவனுக்குள் நடப்பதைக் குறித்தே பேசுகிறது. Istvánன் சிறுவயது முதல் எல்லாவற்றிலும் அவன் காட்டும் detachment அவனது வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை நாவல் சொல்கிறது.
நாவலில் கதாபாத்திரமோ அல்லது அவர்களது செயல்களோ மொத்தத்தையும் பேசட்டும் என்று எழுத்தாளர் ஒதுங்கிக்கொள்வது நல்லதொரு இலக்கிய யுத்தி.
டேவிட் பாலியல் விவகாரங்களை விளக்கமாகவும் நாவலின் மிக முக்கியமான / நுட்பமான கட்டங்களை வெகு சுருக்கமாகவும் முடித்துக்கொள்வது இந்த நாவல் குறித்து நிறையப் பேச வைத்திருக்கிறது.
நாவலில் Narrative gap மற்றும் Evading narrative ஆகிய இரண்டு யுத்திகளையும் டேவிட் பயன்படுத்தியிருக்கிறார்.
Istvánன் பதினைந்து வயதில் அவன் அம்மாவைவிட வயதுகூடிய பெண்ணுடன் அவன் கொள்ளும் பாலியல் உறவும் (பாலியல் குறித்த புரிதல் அதற்குமுன் அவனுக்கு இல்லை என்பது முந்தைய நிகழ்வுகள் மூலம் விளக்கப்படுகிறது) அதற்குப் பிந்தைய கொலையும் ஏற்கனவே Detached ஆக இருக்கும் Istvánன் எதிர்காலத்தைக் கட்டமைத்திருக்கக்கூடும்.
இவை இரண்டும் இல்லாவிட்டால் அவன் வேறொரு மனிதனாகி இருக்கலாம்.
அம்மா ஒரு முக்கிய கதாபாத்திரம். அவளது ஆளுமை Istvánன் வாழ்வில் கடைசிவரை வருகிறது. ஆனால் அவளது எண்ண ஓட்டங்கள் நாவலில் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது.
அதேபோல் István நூற்றுக்கணக்கான முறைகள் சொல்லும் ‘Okay’ உரையாடலை முடித்துக் கொள்வதற்கோ, இல்லை உணர்வுபூர்வமாக ஒன்றிவிடாது தடுப்பதற்கோ உபயோகிக்கப்படுகிறது.
ஹெலன் மற்றொரு Complicated கதாபாத்திரம். விதி இவர்கள் இருவருக்கும் முடிச்சுப் போடுகிறது.
அண்டைவீட்டுப் பெண்ணைக் காதலிப்பதாக István சொல்கையில் அவள் பயப்படுவதற்கும், ஹெலன் அவளது கணவனின் நோய்மைக்காகக் கண்ணீர் விடுகையில் István அவள் கணவனின் மீதான காதலைப் புரிந்துகொள்வதற்கும் எவ்வளவு வேறுபாடு!
Flesh ஒரு இலக்கிய வாசகனுக்குத் தேர்வு வைத்து அவனது மதிப்பெண்ணை அவனே கண்டுகொள்ளவைக்கும் நாவல்.
Flesh: A Novel by David Szalay
நன்றி: https://saravananmanickavasagam.wordpress.com