மலேசியாவில் கௌதமி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

மலேசியாவில் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இதுவரை தொடர்ந்து நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிற பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தற்போது மலேசியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடிகை கௌதமி நடத்த இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற நிகழ்ச்சிக்கும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவரான பி.வி.சுப்பாராவ், “மலேசிய சமூகப் பிரச்சனைகளைப் பற்றி பேச தமிழக சினிமா நடிகைதான் கிடைத்தாரா? தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாக அந்த எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பதிவு மலேசியாவில் வைரலாகி வருகிறது.

 

Comments (0)
Add Comment