செய்தி:
மத்திய அரசு தெரிவித்திருக்கிற புள்ளி விவரப்படி அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு பத்தாவது இடம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவிந்த் கமெண்ட்:
என்னதான், தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் வசதிகளைப் பெருக்கி இருப்பதாகச் சொன்னாலும், காலை உணவுத் திட்டம் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொன்னாலும், ஏன் மாணவர் சேர்க்கை மத்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு ஏன் குறைந்திருக்கிறது?
அதிலும் தமிழகம் ஏன் பத்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது?
எத்தனையோ அரசுப் பள்ளிகள் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டு மாணவர் தேர்ச்சி விகிதத்தில் முன்னணி வகிக்கின்றன என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அதேசமயம், அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பொதுவான நடத்தைகள் பற்றிய விமர்சனங்களும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் சில பகுதிகளில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், மத்திய அரசு, அரசுப் பள்ளிகள் விஷயத்தில் பத்தாவது இடத்திற்குத் தள்ளியதற்கு தமிழக அரசின் கல்வித்துறை என்ன பதில் சொல்லப் போகிறது?
ஆசிரியர்கள் என்ன பதிலளிக்கப் போகிறார்கள்?