பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சார்பில் ஒரு கோரிக்கை!

பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்!

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாகத் தேர்வை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

☀ தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களில்… ஒரு கலைஞன் இருப்பான்… அவனுக்குக் கணிதம் தேவைப்படாது.

☀அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்… அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

☀ஒரு இசைஞானி இருப்பான்… அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

☀ஒரு விளையாட்டு வீரனிருப்பான்… அவனது உடல் நலனே முக்கியமன்றி பௌதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை…!! எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒரு போதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்குச் சொல்லுங்கள்… இது வெறும் ஒரு தேர்வு மட்டுமே. நீ வாழ்க்கையில் வெற்றிகொள்ள இதைவிட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.

“என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படிச் சொல்லிப் பாருங்கள். தேர்வில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான். வெறுமனே ஒரு தேர்வு, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மதிப்பெண் என்பது வெறும் எண் தான்… வாழ்க்கையின் முடிவே அது அல்ல… புரிந்து, புரிய வையுங்கள்.

நன்றி: முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment