அருமை நிழல்:
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959-ம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள், தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்து, இல்லத்துக்கு தன் தாய் ராஜாமணி நினைவாக அன்னை இல்லம் என்று பெயரிட்டார்.
இந்த இல்லத்தில் சிவாஜி நடித்த படங்கள் உட்பட பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன.
தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த பல படங்களின் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டிருக்கின்றன.
இதனிடையே, சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதையடுத்து, அவர் வீடு இருந்த தெற்கு போக் சாலை என்ற பெயரை மாற்றி செவாலியே சிவாஜி கணேசன் சாலை என பெயரிட்டது சென்னை மாநகராட்சி.
குழந்தைகளோடும் தன் குடும்பத்தோடும் அன்னை இல்லத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அன்னை இல்லத்தின் பாசத்தையும் குடும்ப உறவையும் பிரதிபலிக்கிறது.
சிவாஜியின் அப்பா சின்னய்யா, தாயார் ராஜாமணி, சிவாஜி உட்பட மேலே முதலாவதாக, பிரபு, மூத்த மகள் சாந்தி, அடுத்ததாக ராம்குமார் அமர்ந்திருக்கிறார்கள்.